Thursday, January 7, 2010

உடுக்கை உருவான கதை.....


எனக்கு சின்ன வயசில் இருந்தே மேடை ஏறி பாட்டு கட்டணும்னு ஒரு ஆச.... ஆனா மனசுக்குள்ள ஆசைய வச்ச ஆண்டவன் குரல்ல ஓரு கட்டைய அதிகமா கொடுத்துட்டான் ...P.சுசீலா ,சித்ரா மாத்ரி இல்லாம ......விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் மாத்ரி ஆகிபோச்சு நம்ம குரலு ..... எனையும் நம்பி என் கைல ஓரு ஆண்டு விழால ஸ்கூல் மிஸ் மைக் கொடுத்தாங்க அன்னைக்கு பதினெட்டு பட்டியும் கேக்குறமாதிரி ஓரு பாட்டு எடுத்து விட்டேன் நம்ம குரு விஜயலட்சுமி ஸ்டைல் ல .......நம்ம ஊரு மாரியம்மா கோயில் திருவிழால கொலவ போடுற மாத்ரி நா வாயிலேயே உடுக்கை அடிச்சு பாடினேன்.......பொசுக்குன்னு உடுக்கை' நு பட்ட பெயர கொதுப்புடாங்கே ........அன்று முதல் உடுக்கை என்று எல்லோராலும் பாசத்தோடு அழைக்கப்பட்டேன் .........இந்த பிளாஷ்பாக் தெரியாத நம்ம காலேஜ் பய புள்ளைக ஓரு தடவ என்ன மேடை ஏத்தி விட்டுடாங்கே......ஊதுனா சங்கும் உடுக்கை அடிச்ச வாயும் சும்மா இருக்குமா .......அடிச்சு சும்மா காலேஜ் ல எல்லாரையும் சாமி ஆட வச்சிட்டோம்ல.......அன்றிலிருந்து உடுக்கை "உலகநாயகி" என்ற புனை பெயருடன் அன்போடு அழைக்கப்பட்டேன் .........காலேஜ் ல நாலு வருஷம் எந்த விழா நடந்தாலும் இந்த உடுக்கையோட பாட்டு இல்லாம எப்புடி...... உடுக்கை பாட்டு பிரேயர் சாங் மாத்ரி ஆகிருச்சி....... இது தானுங்கோ இந்த உடுக்கை உருவான கதை....என்ன பத்தி நல்லா தெரிஞ்சவங்க இப்ப எனக்குள்ள தூங்கிட்டு இருக்ற உடுக்கைய வாழ்க்கைல மறக்க மாட்டாங்க.......என்ன பத்தி தெரியாதவங்க இனிமேல் தெரிஞ்சுகிவீங்க .....என்ன பத்தி Mr.வள்ளுவர் கு கூட தெரிஞ்சிருக்கு அதான் " உடுக்கை" ல் ஓரு குரல எழுதிட்டு போயிருக்கார்....... சரிங்க மஹா ஜனங்களே இனிமேல் அடிகடி சந்திப்போம்........

அன்பு வணக்கத்துடன்
உடுக்கை உலகநாயகி