Tuesday, March 23, 2010

எங்க ஊரு உலக அதிசயம்



வணக்கம்,வணக்கம்,வணக்கம் என்னடா உடுக்க கதைய சொல்லிடு எஸ்கேப் ஆகிட்டாளே , ஆள காணமே பாதீங்களா, கொஞ்சம் பிஸி...சரி மேட்டர் என்னன்னா ..... கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு யோசன......அது என்னன்னா நம்ம உலகத்துல இருக்ற ஏழு அதிசயங்கள பத்திதாங்க...இது எல்லாமே மனுஷன் கை வண்ணத்துல உருவானது........ இதுல நம்ம நாட்டு தாஜ் மஹாலும் இருக்றது பெருமைய இருந்தாலும் நம்ம பொறந்த மண்ணுல ஒன்னுகூடவா அதிசயமா இல்லாம போச்சுன்னு ஒரு கவலை......
சமாதானத்துக்கு நம்ம தமிழ் நாட்டுலயும் இந்த மாத்ரி ஆச்சர்ய படுற அளவுக்கு தஞ்சை பெரிய கோயில், மீனாக்ஷி அம்மன் கோயில் இப்படியெல்லாம் இருக்கு ஆனா என் கவல என்னன்னா நான் பொறந்த பழனி பண்ணுல இதுமாதரி அதிசய படுற அளவுக்கு ஒன்னும் இல்லாமபோச்சே அப்படின்னுதான் இதபத்தி யார்ட போயி பொலம்புறதுனு தெரியாம அல்லாடிடு இருந்தேன்.....

அப்ப எனக்கு சிக்குனவரு எங்க அப்பா தான் .....ஏன்னா சின்னவயசுல இருந்தே பழனி மலய பத்தியும் அந்த கோயில் அருமை பெருமைகளையும் பதியும் ...முருகன் பழனிக்கு வந்த திருவிளையாடல் கதையையும் என்னக்கு சொல்லி வளர்த்தவரு அவரு தான அது மட்டும் இல்லாம இப்ப அவரோட பார்ட் டைம் ஜாப் பழனி மலைய பத்தி ஆராயிச்சி செய்றது தான் .....

பழனி மலையின் வாஸ்து பற்றியும் அதன் அமைப்பினால் பழனி மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் பத்தி ஆராயிச்சி செய்யிராரு ....கூடிய சீகிரதுல அத பத்தி எல்லாம் ஒரு புத்தகம் போட போறாரு...... அதனால அவர்தான் கரெக்டுன்னு தோனுச்சு ...இப்பெல்லாம் "எல்லாம் முருகன் செயல்!!!"னு சொல்ற அவர்ட போயி என் சந்தேகத்த கேட்டேன்.......

அவரு ஆராயிச்சினால அவரு தெரிஞ்சுகிட்டதையும் மக்களுக்கு தெரியாத சில உண்மைகளையும் என்னக்கு சொன்னாரு.....ரெண்டு மூணு பிட்டதான் போட்டாரு நா ஷாக் ஆகிட்டேன்..... .அது என்னனு இப்ப பாப்போம்......

நம்ம எல்லாரும் திருவளையாடல் கதை தெரிஞ்சவங்கதான்,அதுல முருகன் பழனிக்கு வந்த இஸ்ஸு எல்லாரும் அறிஞ்சது.அந்த குடும்ப சண்டைல 'ஞான' பழம்னுதான் சொல்லி இருக்காங்க ஆனா எல்லா படத்துலயும் மாம்பழத்ததான் காட்டுவாங்க.ஒருவேல பழம் என்ற சொல்லுக்கு உதாரணமா இருந்தது மாம்பழம்தான் போல .......



சரி பழனி மலை அதிசயத்துக்கு வருவோம் ...அப்பா என்ன சொல்றாருன்னா பழனி மலைய (டாப் வியு) ஹெலிஹோப்ட்டர்ல இருந்து பாத்த மாம்பழம் வடிவுல இருக்குமாம்!!. அதுக்கு ஆதாரமா எடுத்த புகை படத்தையும் காட்டினாரு.அது மட்டுமில்லைங்க பழனி மலை கோயில மேல(ஹெலிஹோப்ட்டர்) இருந்து பாத்த முருகன் படுத்துருக்க மாத்ரி இருக்குமாம்!!!அந்த மாத்ரி ஒரு வஸ்து அமைப்புல கட்டி இருக்காங்களாம் அந்த காலத்துல.

இன்னும் இது மாத்ரி நிறைய இருக்குன்னு சொல்லிட்டு மீதிய புத்தகத்த பாத்து தெரிசுக்கனு சொல்லிட்டு எஸ்கேப் ஆனார் அப்பா.இந்த மேட்டர் பத்தாதா நமக்கு உடுக்கை அடிச்சி ஊருக்கு சொல்லி பெரும பட்டுக்ரதுக்கு.எங்க ஊருலயும் அதிசயமா சொல்ற அளவுக்கு மேட்டர் இருக்குன்னு சந்தோசமா இருந்துச்சு.

பழனில இயற்கையா அமஞ்ச ஒரு அதிசயமும் மக்கள் கை வண்ணத்துல உருவான ஒரு அதிசயமும் பற்றி தெரிஜதுல சந்தோசம்.அதை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுல மிக்க சந்தோசம்.சரி வர்டா!

முருக மலை அதிசய பெருமையோடு
உடுக்கை உலகநாயகி

1 comment:

  1. Ade, ithu enakku theriama pochhe. Perukku naanum palani thaan. That was good. Innoru athisayam palanilla ennanna ------ my dear vinu.

    ReplyDelete